பன்னிரண்டு வயது சிறுவன்.புலம் பெயர்ந்து நிற்கிறேன்.ஆறாம் வகுப்பு
சேரவேண்டும்.பெரியப்பா கடைசி இரண்டு பிள்ளைகளான சேஷு,சூரி இருவரும்
திருச்சி இ.ஆர். மேல்நிலை பள்ளியில் படிக்கிறார்கள்.நாங்கள் ஸ்ரீரெங்கம்
ஸ்ரீனிவாச ராவ் தெருவில் வசிக்கிறோம்.இ.ஆர்.பள்ளியில் இடமில்லை.ஆகையால்
திருச்சி டவுன் ஸ்டேஷன்பக்கத்தில் உள்ள உருமு தனலட்சுமி பள்ளியில்
இடமிருந்தது.ரயிலில் சீசன் பாஸ் எடுத்து செல்லவேண்டும்.பெரியப்பா மூத்த
மகன் சேதுராமன் ஆடிட்டருக்கு படிக்கிறான்.அவருடன் பள்ளியில் சேர
சென்றேன்.சிறிய பரீட்சை வைத்தார்கள்.அதில் தேர்ச்சி பெற்று பள்ளியில்
சேர்ந்தேன்.
Wednesday, April 2, 2014
Tuesday, April 1, 2014
அம்மாவின் நினைவு
அம்மாவின் நினைவு நெஞ்சைவிட்டு அகலுமா?பெரியம்மா நல்லவங்கதான்.ஆனாலும் அம்மாவாக முடியுமா?சேஷு,சூரி,காமாக்ஷி,பேபி
சேதுராமன்
எல்லோரும் நன்றாக பழகினார்கள்.திருச்சிக்கு போன இரண்டாவது நாளே வீட்டில்
எனக்கு என்ன வேலை என்று புரிந்தது.சப்பாணி என்ற வேலைக்காரன்
இருந்தான்.தினமும் மாலை 50,60 குடம் தண்ணீர் கொல்லையில் உள்ள
கிணற்றிலிருந்து இறைத்து தருவதை உள்ளே உள்ள ட்ரம்மில் கொண்டு வந்து
கொட்டவேண்டும்.இந்த வேலையை என்னை விட்டு தன குழந்தைகளிடம் ஏன் சொல்லவில்லை?என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.அதான்
அம்மாவுக்கும்,பெரியம்மாவுக்கு ம் உள்ள வித்தியாசம்.இந்த விஷயம் பெரிய்ப்பவுக்குத் தெரியாது.
Labels:
அம்மாவின் நினைவு
Location:
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Comments (Atom)