அம்மாவின் நினைவு நெஞ்சைவிட்டு அகலுமா?பெரியம்மா நல்லவங்கதான்.ஆனாலும் அம்மாவாக முடியுமா?சேஷு,சூரி,காமாக்ஷி,பேபி
சேதுராமன்
எல்லோரும் நன்றாக பழகினார்கள்.திருச்சிக்கு போன இரண்டாவது நாளே வீட்டில்
எனக்கு என்ன வேலை என்று புரிந்தது.சப்பாணி என்ற வேலைக்காரன்
இருந்தான்.தினமும் மாலை 50,60 குடம் தண்ணீர் கொல்லையில் உள்ள
கிணற்றிலிருந்து இறைத்து தருவதை உள்ளே உள்ள ட்ரம்மில் கொண்டு வந்து
கொட்டவேண்டும்.இந்த வேலையை என்னை விட்டு தன குழந்தைகளிடம் ஏன் சொல்லவில்லை?என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.அதான்
அம்மாவுக்கும்,பெரியம்மாவுக்கு ம் உள்ள வித்தியாசம்.இந்த விஷயம் பெரிய்ப்பவுக்குத் தெரியாது.
No comments:
Post a Comment