Thursday, November 29, 2012

அம்மா

தாயின் சபதம்
அம்மா
1946-ஆம் வருடம்.அம்மாவிற்கு வயது 40 இருக்கும்.அவர் இப்போது உயிருடன் இல்லை.அப்போது எனக்கு 10 வயது. நான் 4-வது படித்துக் கொண்டிருந்தேன். தேர்முட்டி பள்ளியில்.அம்மா எங்கள் வீட்டு இரண்டாவது கட்டில் மண் தரையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவருக்கு ப ல நாட்களாக காதில் வலி.இரண்டு,மூன்று நாட்களுக்கு ஒரு முறை தர்ம ஆஸ்பத்திரிக்கு(Government Hospital)சென்று வந்தார்.
          வீட்டின் இரண்டாவது கட்டு மிகப்பெரிய இடம்.இதில் இரண்டு அறைகள் உண்டு.இதோ அம்மா படுத்திருக்கும் இடத்திற்கு எதிரே அறைதான் சமயக்கட்டு.அதாவது சமையல்அறை.பக்கவாட்டில் கிணறு.வீட்டுக்குள்ளேயே.கிணற்றின்மேல் வானம் தெரியும்.வீட்டிற்குள்ளி லிருந்தே நிலா, நக்ஷதிரங்களைப் பார்க்கலாம்.இந்த திறந்த வழி வழியாகத் திருடன் இறங்க முடியும்
          நான் அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தேன் சற்று தூரத்தில் என் அக்காக்கள் இ ருவரும் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அக்கா இருவரின் நிழல் நீண்டிருந்தது. தாயக்கட்டைகள் இரண்டும் வெங்கலத்தில் செய்யப்பட்டவை.ஆகையால் அவை தரையில் உருட்டப்பட்டபோது வெண்கல ஓசை  தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தது.மணி எட்டு இருக்கும்.கடிகாரம் இல்லை.
             ஒன்று,இரண்டு மூன்று என்று கட்டங்களை எண்ணிக்கொண்டு இருந்தாள் என் மூத்த அக்கா.

               'விளையாடியது போதும்.சாப்பிட்டு படுங்கோ'அம்மா.


 இருவரும் எழுந்தனர்.கையில் சிம்னி விளக்கையும் கையில் எடுதுதுகொண்டு.அம்மாவின் அரவணைப்பில் இருந்த நானும் எழுந்தேன்.மூவரும் சமயற்கட்டுமுன் தட்டைப் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தோம்.இரவு மோர்சாதம் மட்டும்தான்.சாதத்தை தட்டில் போட்டு மோரை ஊற்றினால் என் அக்கா.


"அம்மா மோர் வெறும் தண்ணீரா இருக்கு"நான்.

"ஒரு சிலுப்பிதான் வாங்கறோம். என்னடா பண்றது"அம்மா.

'சரிம்மா"நான்.


             மூவரும் சாப்பிட்டு முடித்தோம்.பெரியக்கா என் அம்மாவுக்கு காலையில் வைத்த கஞ்சியையும்  நார்த்தங்காவையும் கொண்டுவந்து கொடுத்தாள். அம்மா அதை மடக்கு மடக்கென்று குடித்ததாள்.


"சரி. எல்லாரும் படுத்துக்கோங்கோ"அம்மா.


"விளக்கை சுவத்தோரம் வையுங்கோ."மீண்டும் அம்மா.


அக்கா சுவத்தோரம் விளக்கை திருப்பி வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

நானும் அம்மாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன்.தலையைத் தூக்கி பார்த்தேன்.இப்போது தூணின் நிழல் மிக நீண்டிருந்த்தது.பேயைப் போல் இருந்தது.அம்மாவை இறுக்கக் கட்டிக்கொண்டேன்.கண்களை இருக்க மூடிக்கொண்டேன்.எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை
                                                                                                                          உண்மைகள் தொடரும்....

No comments:

Post a Comment