சித்தப்பாவும்,பெரியப்பாக்களும்
எனக்கு ஒரு சித்தப்பா சாம்பமூர்த்தி அய்யர்.இவர்தான் என்னை ஆரம்பபள்ளியில் சேர்த்துவிட்டவர்.எங்கள் நிலங்களையும் மற்றும் பெரியப்பாக்களின் நிலபுலன்களையும் கவனித் துவந்த்தவர்.
எங்களுக்கு வருஷம்தோறும் 20 மூட்டைகள் நெல் மற்றும் தேவியான உளுந்து துவரம்,பாசிப்பருப்பு கொண்டுவந்து கொடுப்பார். அவருடன் ரொம்ப இருந்தது.வருடங்கள் தொடர்பு இருந்தது.
எர்ணாகுளம் வெங்கடராம அய்யர்.இவர் கொச்சியில் வேலைபார்த்தவர்.அதனால் இந்த அடைமொழி.என் தகப்பனார் காலமான பிறகு அவருடன் எங்களுக்கு உறவு இல்லை.அவர் ஒய்வு பெற்ற பிறகு கணபதி அக்ரஹாரதில் உள்ள பரம்பரை வீட்டில் இருந்தார்.
ஒரு தடவை அவர் வீட்டிற்கு போனபோது அவர் ஊஞ்சல் ஆடிகொண்டிருந்தார்.ஒரு மழை நாளில் அவர் திருவையாறு கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தார்.நான் என் அம்மாவுடன் பின்னால் போனவன் அவர் குடையை கை இடுக்கில் வைத்திருந்ததை பிடித்து இழுத்தேன்.அவர் திரும்பிப் பார்த்து மறைத்து விட்டு போய் விட்டார்.அதுதான் அவரை கடைசீயாக பார்த்தது.
அவருக்கு இரண்டு பெண்களும்,ஒரு மகனும்.ஒருபெண் விதவை.கணபதி அக்ரஹாரத்தில் தனி சொந்த வீட்டில் இருந்தார்.மற்ற இரண்டு பெரும் இருப்பது ரொம்ப வருஷத்திற்கு பிறகு தெரியும்.அதை பிற்ப்பாடு சொல்கி றேன்.இவர் எப்போது இறந்தார் என்றுகூட ஞாபகமில்லை.
அடுத்தவர் கணபதி.இவர் ஸ்டேட் பாங்க்கில் வேலைப் பார்த்தார்.தஞ்சாவூரில் குடியிருந்தார். இவரை கஞ்சப் பெரியப்பா என்று கூப்பிடுவோம்.இவருடனும் எந்த பேச்சு வாரத்தையும் கிடையாது. நான் எட்டாவது படிக்கும்போது ஒரு நாள் என் அம்மா சொன்னதின் பேரில் தஞ்சாவூர் சென்றேன்.எட்டு மைல் தூரம்தான்.ரோட்டோரம நடந்து சென்றேன்.ஸ்கூல் பீஸ் மாதத்திற்கு அரை சம்பளம் மூன்றரை தான்.அதைக் கேட்டு வாங்கிவரத்தான் போனேன்.
என் பெரியம்மா குமுட்டியில் எதோ செய்து கொண்டிரிருந்தார்கள்.நான் வந்த விஷயத்தை சொன்னவுடன் சிசர் டப்பாவைக் குலுக்கி அதிலிருந்து சரியாக மூன்றரை எடுத்து கொடுத்தார். அதன் பிறகு ஜன்மத்தில் நான் அவர்களைப் பார்க்கவில்லை.
அவர்களுக்கு ஒரு பெண்ணோ அல்லது பிள்ளையோ.அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பின்னாளில் அறிந்தேன்.
இன்னொரு பெரியப்பா என் தந்தைக்கு பின்பு காலம்கி விட்டிருந்தார்.அவர் பெயர் தெரியவில்லை.அவருடைய மனைவி கணபதி அக்ரகாரத்தில் குடியிருந்தார்.அவருக்கு பாப்புணு என்றொரு மகள்.எனக்கு மிக மூத்தவள்.திருச்சியில் ஸ்டேட் பங்கில் வேலை பார்த்தவரை கல்யாணம் செய்தவர்.
என் அம்மா அவர்கள் குடும்பம் மற்றும் சித்தப்பா சாம்பமூர்த்தி குடும்பத்தையும் சென்று பார்க்கும்போதும் நானும் போவேன்.கணபதி அக்ரஹாரம் திருவையாற்றில் இருந்து எட்டு மைல்.நடந்தே போவோம்.சாம்பமூர்திக்கு சுப்புணி,வரது,இன்னொரு மகன் (பெயர் ஞாபமில்லை).அவர்கள் தாத்தா ஊரான மெலட்டூர் கிராமத்தில் படித்து வந்தார்கள்.
எனக்கு இன்னொரு பெரியப்பா இருந்தார்.அவர் பெயர் திரு சுவாமிநாத அய்யர்.அவர் எங்கள் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்து வந்தார். அதைப் பற்றி பிற்பாடு சொல்கிறேன் .
எனக்கு இன்னொரு பெரியப்பா இருந்தார்.

No comments:
Post a Comment