குடுமி மகாத்மியம்
ஆறாவது படிப்பிற்காக நான் திருச்சிக்கு புறப்படும் முன்பு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.நான் திருவையாற்றுக்கு வரும் முன்பே குடுமி வைத்திருந்தது தெரியும்.அந்த குடுமி நாலாவது படிக்கும்வரை தொடர்ந்தது.நண்பர்கள் பலரும் கிண்டல் செய்ததால் குடுமியை எடுத்து கிராப்பு வைப்பது என முடிவு செய்தேன்.என் அம்மாவிடம் சொன்னவுடன் எதிர்ப்பு சொன்னார்கள்.முக்கிய காரணம் பெரியப்பா.அவர் விரும்பமாட்டார்.என் அக்காக்கள் இருவரும் பெரியப்பா திருச்சியில் இருக்கிறார் அவர் எப்போது திருவையாறுக்கு வருவாரோ அப்போது பார்த்துகொள்ளலாம் என்றார்கள்.
என் அம்மா அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தவுடன் அம்பட்டனைக் கூப்பிட்டு குடுமியை காலி செய்தேன்.என் சகோதரிகள் இருவரும் என்னை விட இரண்டு,நான்கு வயது வித்தியாசம் உள்ளவர்கள்.மூத்தவர் பெயர் சுப்பலக்ஷ்மி.முத்து என்று கூப்பிடுவோம்.அடுத்தவர் கமலா.பாப்பா என்று கூப்பிடுவோம்.இருவரும் முறையே ஆறாவது,ஏழாவது வகுப்பு படித்தார்கள்.திருவையாற்றிலே வடக்கு தெருவில் கிறிஸ்டியன் மிஷினரி பள்ளிக்கூடம்,.பெண்கள் பள்ளி.வாத்தியார்கள் எல்லோரும் பெண்கள்.தலையில் வெள்ளைத் துணி போர்த்தியிருப்பார்கள்.மாணவிகள் 'அம்மாங்க'என்றுதான் கூப்பிடுவார்கள்
.தேர்முட்டி பள்ளியில் படிக்கும்போதே அம்மன்கோவில் கிழக்கு சுவரை ஒட்டி தோட்டம் போடுவோம்.அப்போதிறிந்தே எனக்கு செடி,மரம் என்றால் உயிர்.இந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.திருவையாற்றில் வருடாவருடம் தியாகராஜர் உத்சவம் நடக்கும்.நாங்கள் இருந்த பாவாசாமி அக்ரஹார தெருவில் முக்கில் ஒரு அனுமார் கோவில் உண்டு.அதிலும் வருடாவருடம் அனுமத் ஜெயந்தி நடக்கும்.அனுமார்கோ.வில் நிர்வாகத்ததை எஸ்.வெங்கிட்டு என்பவர் கவனித்து வந்தார்.
பிற்காலத்தில் எனக்கு மிகவும் நண்பரானார்.அனுமார்கோவில் உத்சவத்தில் அண்ணாசாமி பாகவதர் கதாகாலக்ஷேபம் செய்வார்.அண்ணாசாமி பாகவதர் எங்கள் தெருவில்தான் இருந்தார்.அவர் இரண்டாவது மகன் சங்கரன்.பின்னாளில் அவர் என் ஆத்ம சிநேகிதன்.அவர் திருச்சி சென்ஸ் ஜோசப் காலேஜ் படிப்பு முடித்து திருவையாறு ஸ்ரீனிவாச ராவ் ஹை ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றார்.சென்ற வருடம் திருவையாறு போன போது அவரை பார்க்க முயன்றேன்.முடியவில்லை.அவர் ஊரில் இல்லை.
குரு வீட்டிற்கு பக்கத்துக்கு வீடு வைத்யனாதபாகவதர்.அண்ணாசாமி பாகவதர் தம்பி.அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்தவன் பெர்யர் பாபு.அடுதவவ்ன் பெயர் ஞாபகமில்லை.பாபு கோலிகுண்டு அபாரமாக விளையாடுவான்.குறி வைத்து அடித்தான் என்றால் சொடேல் என்று அடிப்பான்.அதே மாதிரி பம்பரமும்.ஆக்கு வைத்து விளையாடுவான்.
அனுமார் கோவில் பக்கத்தில் கிட்டு வாத்தியார் வீடு.அண்ணாசாமி பாகவதருடைய இன்னொரு தம்பி.எவர் மிருதங்கம் வாசிப்பார் என்றால் வைத்யநாத பாகவதர் பின்பாட்டு.ஒரு தடவை அண்ணாசாமி பாகவதர் பூணி வாண்டையார் கூப்பிட்டு கதாகாலக்ஷேபம் செய்துவிட்டு வந்தவுடன் ரூபாய் 3000 வருமானம் வந்தது என்று பேசிக்கொண்டார்கள்.ரூபாய் 3000என்பது அந்த காலத்தில் அதாவது 1948-49 கலீல் பெரிய தொகை.கிட்டு பாகவதர் வீட்டில் பாலக்காட்டு மணி அய்யர் தங்குவார்.அதே மாதிரி ஜி என் பாலசுப்ரமணியம் அண்ணாசாமி பாகவதர் வீட்டில் தங்குவார்.
கிட்டு பாகவதற்கு ஒரே மகன்.அவன் ஆர் .எஸ்.எஸ்.சில் இருந்தான்.நானும் இன்னும் பல பேர்களும் அம்மன் கோவில் பின் பக்கம் ஆர்.. எஸ்.எஸ். ட்ரில் செய்வோம்.அது சில வருடம் நடந்தது.
பக்கத்து வீடு அருந்ததிஉடையது .என் சகோதரிகளின் நண்பி.அவர் தம்பி குரு.அவர்கள் இப்போது அந்த வீட்டில் இல்லை. சென்ற முறை போனபோது தெருவின் முடிவில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார்.
அனந்து.சேஷாரா ம அய்யர் மகன்.எதுத்த வீட்டுக்கு பக்கத்து வீடு.எப்போதும் குட்டி ரேடியோ கையில் வைத்துக்கொண்டு கிரிக்கெட் கமெண்டரி கேட்டுகொண்டிருப்பான்.ஹஜாரே அவுட் என்பான்.கடைசி காலத்தில் பயித்தியம் பிடித்துவிட்டது என்று சொன்னார்கள்.பாவம்.
எதுத்த வீட்டில் இருந்தவர் பத்து என்ற பத்மநாபன்.அவன் அக்கா ருக்கு.அண்ணன் நரசிம்மன்.பத்மநாபன் திருச்சியில் பி ஏ படித்து ஸ்ரீனிவாச ராவ் ஹை ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரிராக ஒய்வு பெற்றார்.தற்போது அனுமார் கோவில் பக்கத்தில் உள்ள கபிஸ்தலம் என்ற பெரிய வீட்டை வாங்கி சௌக்கியமாக இருக்கிறார்.நான் சென்ற போது அவரை பார்த்துவந்தேன்.

அனந்து.சேஷாரா

No comments:
Post a Comment