பெரியப்பாவின் மகன்கள்
பெரியப்பா சுவாமிநாத அய்யரின் கடைசி பையன் சேஷு என்ற ஆதிசேஷன்.இவன் எதுவும் படிக்கவில்லை.பத்தாவது.படித்ததோ
டு
சரி.அதற்கு பிறகு வீட்டை விட்டு ஓடிவிட்டான்.எங்கு போனான் என்று
தெரியவில்லை.பம்பாய் போய் ஒரு சேட்டிடம் வேலைக்கு சேர்ந்து அவருடைய
பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டான்.இவன் பின்னாளில் பெரிய கட்டிட ஒப்பந்தக்
காரராக ஆனார்.தற்போது பார்சன்(Parsn) என்ற பிரபல கம்பெனி எம்டி Managing Director ஆக உள்ளார்.இவர்
என்னைவிட இரண்டுவயது இளையவர்.
பெரியப்பாவின் மூத்த மகன் சேதுராமன்.இவன் என்னைவிட மிக மூத்தவன்.இவன் ஆடிட்டர் வேலைக்குப் படித்தான்.பாஸ் செய்யவில்லை.ஆனாலும் ஆடிட்டர் வேலை பார்த்து வந்தான்.நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ஒரு நாள் என்னிடம் டோபி கருப்பையா வீட்டுக்கு சென்று உருப்பிடிகளை வாங்கி வரச்சொன்னார்.எனக்கு அப்போது 10 வயதிருக்கும்.கருப்பையா வீடு ஸ்ரீ ரெங்கதில் இருந்தது. நாங்கள் ஸ்ரீரெங்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஸ்ரீனிவாச ராவ் தெருவில் இருந்தோம்.டோபி வீட்டுக்கு போவதை மறந்துவிட்டேன்.மாலை வந்தவுடன் கேட்டார்.என் தலையில் குட்டு வைத்தார். நான் ரோசப்பட்டுக்கொண்டு உடனே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கருப்பயா வீட்டை தேடிக்கொண்டு போனேன்.எப்பொடியோ அவர் வீட்டைகண்டுபிடித்து வாங்கி விட்டேன்.இரவு நேரமாகிவிட்டதால் கவலைப் பட ஆரம்பித்து விட்டார்ககள்.என் வாழ்க்கையில் பல கட்டங்களில் இவரோடு பழக நேரிட்டது.அதைப்பற்றி அவ்வப்பொழுது சொல்கிறேன்.இவர் இப் பொழு து உயிருடன் இல்லை/
பெரியப்பா சுவாமிநாத அய்யரின் கடைசி பையன் சேஷு என்ற ஆதிசேஷன்.இவன் எதுவும் படிக்கவில்லை.பத்தாவது.படித்ததோ
அடுத்த பையன் சூரி என்ற சூரியநாராயணன்.இவன் என்னைவிட நான்கு வயது
மூத்தவன்.இவன்தான் என்னை திருவையாற்றிலிருந்து திருச்சிக்கு படிக்க
கூப்பிட்டு கொண்டு போனவன்.இவனுக்கு படிப்பு வரவில்லை.வீட்டைவிட்டு அடிக்கடி
ஓடிப்போய் விடுவான்.எனக்கு தெரிந்து ஒரு தடவை தஞ்சாவூருக்கு ஓடிப்
போய்விட்டான்.அங்கிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வாசலில் இருப்பதாகவும்
கூப்பிட்டுக் கொண்டு போகும்படி தொலைபேசியில் தெரிவித்தான்.பெரியப்பா போய்
கூப்பிட்டு வந்தார்.பின்பு ஒரு தடவை கரூர் போய் ஒரு சிற்றுண்டி சாலையில்
வேலை பார்ப்பதாக போஸ்ட் கார்டில் எழுதினான்.பெரியப்பா சென்று அழைத்து
வந்தார்.இரண்டு முறையும் வீட்டு வாசலில் வைத்து கோவணம் அணிந்து நிற்க
வைத்தார்.அவன் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது திருடிக்கொண்டு
போய்விடுவான்.பெரியப்பா என்னையம் அவனுடன் ஒப்பிட்டு பேசுவார்.அதனால்
ஆத்திரப்படுவான்.அவன் வாழ்க்கையில் பெரிதாக முன்னேறவில்லை.எதோ கடை வைத்து
பிழைத்துக் கொண்டான்.இப்போது பம்மலில் இருக்கிறான்.அவனை ஒரு திருமணத்தில்
பார்த்தேன்.
பெரியப்பாவின் மூத்த மகன் சேதுராமன்.இவன் என்னைவிட மிக மூத்தவன்.இவன் ஆடிட்டர் வேலைக்குப் படித்தான்.பாஸ் செய்யவில்லை.ஆனாலும் ஆடிட்டர் வேலை பார்த்து வந்தான்.நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ஒரு நாள் என்னிடம் டோபி கருப்பையா வீட்டுக்கு சென்று உருப்பிடிகளை வாங்கி வரச்சொன்னார்.எனக்கு அப்போது 10 வயதிருக்கும்.கருப்பையா வீடு ஸ்ரீ ரெங்கதில் இருந்தது. நாங்கள் ஸ்ரீரெங்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஸ்ரீனிவாச ராவ் தெருவில் இருந்தோம்.டோபி வீட்டுக்கு போவதை மறந்துவிட்டேன்.மாலை வந்தவுடன் கேட்டார்.என் தலையில் குட்டு வைத்தார். நான் ரோசப்பட்டுக்கொண்டு உடனே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கருப்பயா வீட்டை தேடிக்கொண்டு போனேன்.எப்பொடியோ அவர் வீட்டைகண்டுபிடித்து வாங்கி விட்டேன்.இரவு நேரமாகிவிட்டதால் கவலைப் பட ஆரம்பித்து விட்டார்ககள்.என் வாழ்க்கையில் பல கட்டங்களில் இவரோடு பழக நேரிட்டது.அதைப்பற்றி அவ்வப்பொழுது சொல்கிறேன்.இவர் இப் பொழு து உயிருடன் இல்லை/
No comments:
Post a Comment